இறுதிச்சடங்கில் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுக..அங்கிருந்த குரங்கு செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ

இந்தியாவில் இறுதிச் சடங்கின் போது, குரங்கு ஒன்று அங்கு அழுது கொண்டிருந்த பெண் ஒருவருக்கு ஆறுதல் சொல்வது போன்று தட்டிக் கொடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் Nargund பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டதால், உறவினர்கள் பலரும் அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இறுதிசடங்கிற்கான வேலை நடந்து கொண்டிருந்த போது, அவர் இறந்ததை தாங்க முடியாமல் அங்கிருந்த பெண்கள் அனைவரும் கதறி அழுது கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று வீட்டின் உள்ளே நுழைந்த அந்த குரங்கு, அழுது கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் உள்ளே சென்று அதில் ஒரு பெண்ணை பிடித்து ஆறுதல் சொல்வது போல் அருகிலே நிற்கிறது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.