தமிழ் பெண்ணை காதலித்து ஊர் சுற்றிய விஷால்..இப்போது தெலுங்கு பெண்! தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி

நடிகரான விஷால் மற்றும் அவரது காதலி அனிஷா அல்லா ரெட்டிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிச்சயதார்த்ததிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி திருமணம் நடிகர் சங்கத்திற்கான மஹால் கட்டிய பின்னரே என்று விஷால் தெரிவித்திருந்தார். நிச்சயதார்த்ததிற்கு பின் இந்த ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி ஒன்றில், ஒரு தமிழ் பெண்ணை காதலித்து ஊர் எல்லாம் சுற்றிவிட்டு தற்போது ஆந்திராவில் ஒரு ரெட்டி பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் விஷால்.

சரத்குமார் மகள் வரலக்ஷ்மியை காதலித்துவிட்டு கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டார்களாம். இது திரையுலகத்திற்கு தெரியும். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது அவர்தான். கில்லாடி. தன் 60 கோடி கடனை இதன்மூலம் அடித்துவிட்டு தற்போது கோடீஸ்வரனாக உள்ளார் என கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.