திருமணம் ஆன மறுநாள்! மறுவீட்டிற்கு சென்ற மகள் – மருமகன் உயிரோடு எரித்துக் கொலை! பதற வைக்கும் காரணம்!

காதல் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடியை, மறுநாளே பெண்ணின் குடும்பத்தினரேதீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள அகமதுநகர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மங்கேஷ் சந்திரகாந்த் ராம்சிங் (23) என்ற நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ருக்மிணி என்ற பெண்ணை, காதல் திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் திருமணத்தை, பெண்ணின் வீட்டார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மே 1ம் தேதி ருக்மிணி, பெற்றோரை பார்த்துவிட்டு வரலாம் என கணவனை அழைத்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்றுள்ளார். திருமண கோலத்தில் பார்த்தால் சமசரம் ஆகிவிடுவார்கள் என்று இருவரும் நினைத்துள்ளனர். அப்போது, பெண் வீட்டார் மங்கேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில், அவர்கள், மங்கேஷ் மீதும், ருக்மிணி மீதும் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், நிகழ்விடத்திலேயே மங்கேஷ் உயிரிழந்துவிட்டார்.

ருக்மிணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் பற்றி, ருக்மிணி போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதன்பேரில், ருக்மிணியின் தந்தை மற்றும் தாய்மாமன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.