பால் குடிப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா? எப்படி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவென்றால் அது பால்தான்.

பால் மட்டுமின்றி பால் தொடர்பான பொருட்களான தயிர், நெய், வெண்ணெய் என அனைத்துமே நமக்கு ஒவ்வொரு வகையில் நன்மையை வழங்கக்கூடியதாகும்.

ஆனால் பால் பொருட்களால் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பு இதன் முக்கியமான பக்கவிளைவாகும்.

இதனை தவிர்ப்பதற்காக பால் பொருட்களை தவிர்க்கும் டயட் கடைபிடிக்கப்படுகிறது.

உடல் எடைக்காக பால் பொருட்களை தவிர்ப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எலும்புகளின் பலவீனம்

எலும்புகளின் வலிமைக்கு அத்தியாவசிய தேவைகளான கால்சியம், வைட்டமின் டி, புரோட்டின் போன்றவை பாலில் அதிகம் உள்ளது.

சிறுவயது முதலே எலும்புகள் வலிமையடைய வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் எடை குறைப்பிற்காக பால் பொருட்களை தவிர்க்கும் டயட்டை கடைபிடித்தால் இந்த ஊட்டச்சத்துக்களின் இழப்பை ஈடுசெய்யும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் உங்கள் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும். இதனால் இடுப்பு வலி, தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம்

கால்சியம் அதிகம் இருந்தாலும் பாலில் பொட்டாசியம் குறிப்பிட்ட அளவு இருக்கிறது, இது போதுமான அளவு இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

பால் பொருட்களை தவிர்ப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் சேர்த்து கொள்ளும்போது உங்கள் இரத்த அழுத்தத்தில் தொடர்ந்த ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

எடையில் மாற்றம்

பாலை தவிப்பதற்கு எடை குறைப்புதான் உங்களின் முக்கிய காரணமாக இருந்தால் அதனை நீங்கள் அடைவது சந்தேகம்தான்.

ஏனெனில் பாலில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் அது உங்களுக்கு திருப்தியான உணர்வை வழங்கக்கூடும்.

இதனால் உங்கள் எடை சீராக பராமரிக்கப்படும். ஆனால் அதனை நீங்கள் தவிர்க்கும் போது அதற்கு பதிலாக நீங்கள் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளே உங்களின் எடையை தீர்மானிக்கும்.

புற்றுநோய் அபாயம் குறையும்

சில பால் தொடர்பான பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கும் போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை நீங்கள் குறைக்கலாம்.

அதிகளவு கால்சியம் எடுத்துக்கொள்வது ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஏனெனில் அதிகளவு கால்சியம் ஆண்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கிறது.

மேலும் நீங்கள் எப்படிப்பட்ட பால் பொருட்களை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தும் இது மாறுபடும்.

ஏனெனில் இப்போது பால் பொருட்களில் அதிகளவு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் கூட புற்றுநோய் ஏற்படலாம்.