நடிகர் சூர்யாவிடம் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட சுவாரசியமான கேள்வி.. சூர்யாவின் பதில்..!

உங்களுக்கு பிடித்த சிஎஸ்கே வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னாவின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இந்த படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா டிவிட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று கேட்டுள்ளார், இதற்கு பதில் அளித்துள்ள சூர்யா,

“கண்டிப்பாக நீங்களும், தோனியும் தான் எனக்கு படித்த வீரர்கள், உங்களின் பாடும் திறனும், தோனியின் வரையும் திறனும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார்.

மேலும் தான் சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய ரசிகன் எனவும் டிவிட் செய்திருந்தார்”.