பெண்ணிற்கு உறவின் மேல் வெறுப்பு வர காரணம் என்ன..?

பொதுவாக, ஆண்கள் உடலுறவின் ஆரம்பத்திலேயே விந்து முந்தி விடுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பல ஆபாச வீடியோக்களை பார்க்கும் போது இரு பாலருமே அவைகளை போல தாமும் ஈடுபடவேண்டும் என்று நினைப்பதாலேயே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உறவில் ஈடுபடும் போது இருவருக்குமே திருப்தியில்லை என்ற நிலை ஏற்படுகிறது.

இதனாலேயே பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் ரீதியான பிரச்சினைகள் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் குறைகளை பெரிதாக்கி குடும்பங்கள் உடைகின்றன.

ஆண்களுக்கு விந்து விரைவில் வெளியேறுதல் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் பெண்களுக்கு உச்சநிலை அடைய சிறிது நேரம் ஆகும்.

இவ்வாறிருக்கும் நிலையில், ஆண்கள் தங்களுக்கு விந்து வெளியான உடனேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் ஏமாற்றமடைந்து விடுகிறார்கள்.

இதனை சரி செய்து இருவரும் இணைந்து ஒரே நேரத்தில் உச்சநிலை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

என்றாவது ஒருநாள் என்றால் பெரிய அளவில் பாதிக்காது. இரண்டு மூன்று முறை தொடர்ந்தோ இல்லை அடிக்கடியோ இப்படி நிகழ்ந்தால் அப்பெண்ணிறகு முதலில் கலவியின் மேல் வெறுப்பு வரும்.

அதுவும் மாதத்தில் சில நாட்களில் பெண்களுக்கு உணர்வு அதிகமாக இருக்கும். அந்நாட்களில் இவ்வாறு ஏமாற்றமடைந்தால் மனமுடைந்து போவார்கள். எந்த வேலையிலும் நாட்டம் இராது.

அவர்களின் வயது முதிர்ச்சியை பொறுத்து வழி தவறவும் வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். அடுத்தநாளில் திருப்திபடுத்த முயற்சி செய்யுங்கள்.

இது தொடர்ந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். ஏனெனில் இருவர் சம்பந்தப்பட்ட விசயம். முழு குடும்பத்தையே பாதிக்கும்.