மகனால் ஏமாற்றப்பட்ட பெண்… காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்! கலங்க வைக்கும் பதிவு

கேரளாவில் இன்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு நெகிழ்வான நிகழ்வு ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. தன்னுடைய மகன் கைவிட்ட பெண்ணின் திருமணத்தை நடத்தி பையனின் தந்தை ஒட்டுமொத்த உள்ளங்களையும் கலங்க வைத்துள்ளார்.

இதில் என்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள். ஆமாம் சும்மா திருமணம் செய்து வைக்கவில்லை அதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளது.

கேரளா மாநிலம் திருநக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜி இவர் நம்மைப் போன்று ஒரு வளைகுடா வாழ் தொழிலாளி ஆவர். இவருடைய மகன் 6 வருடங்களுக்கு முன்பு +2 படிக்கும் நேரத்தில் தன்னுடைய படிக்கும் பெண்ணை காதலித்தார்.

இதையடுத்து இரண்டு பேரும் அந்த சின்ன வயதில் நாட்டைவிட்டு தலைமறைவு ஆனார்கள்.

இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

இதையடுத்து பெண்ணின் வீட்டார் இவள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி அவளை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து குறித்த பெண்ணை திருமண வயது வந்ததும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஷாஜி முடிவு செய்தார்.

பெண்ணை தன்னுடைய மகளை போல் வீட்டில் நிறுத்தி மேற்படிப்பு படிக்க வைத்தார்.

தன்னுடைய மகனை கல்லூரி விடுதியிலும் தங்க வைத்து மேற்படிப்பு படிக்க வைத்தார் ஷாஜி. இதையடுத்து மகனின் படிப்பு முடிந்தநிலையில் தன்னுடைய வளைகுடாவில் வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதற்கிடையில் அவருடைய மகன் வேறொரு பெண்ணை காதலித்து, கடந்த விடுமுறையில் தாயகம் சென்று இரண்டாவதாக காதலித்த அப்பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.

இந்த செய்தி அறிந்து தாயகம் வந்த ஷாஜி தன்னுடைய மகனுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் தன்னுடைய மகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணை தன்னுடைய மகளை போல் வளர்த்த அவர், அவரது நிலையினை நன்கு அறிந்தவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து ஷாஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் தன்னுடைய வீடு உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அந்த பெண்ணுக்கே ஷாஜி எழுதி வைத்துள்ளார்.

இறுதியில் ஷாஜியின் மகனுக்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தும் வழங்கவில்லையாம்.