அவளை செருப்பால் அடியுங்கள்! 36 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான வீடியோ

சாம்ராஜநகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளியை சேர்ந்த பெண் ராஜாமணி (36). இவர் சிறிய உணவகம் நடத்தி வருவதோடு சிட்பண்ட் தொழிலும் செய்து வருகிறார். இதற்கிடையே, ராஜாமணி சமீபத்தில் சிலரிடம் ரூ.50,000 கடன் வாங்கிய நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நேற்று ராஜாமணியை கடன் கொடுத்த சிலர் மின்கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர். நீண்ட நேரமாக மின்கம்பத்தில் கட்டிவைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோவில், அவளைச் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடியுங்கள் எனச் சிலர் உரக்கச் சொல்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ