டிக் டாக்கில் 120 மில்லியன் அடிமைகள்..! இந்தியாவில் மற்றும் இத்தனை கோடி வருமானமா? டிக் டாக் நிறுவனம் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் டிக் டாக் மியூசிக்கலி ஆப் மூலம் பலரும் வீடியோ பதிவிட்டு தங்கள் திறமைகளைக் காட்டி பொழுதைக் கழித்து வந்த பலர், தற்போது டிக்டாக்கில் கிடைக்கும் லைக்கிற்காக ஏங்கும் முழுநேர அடிமைகளாக மாறிபோய்விட்டனர் என்பதற்கு இந்த வீடியோ சான்று..!   முன்பு ஒரு காலத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது சாதாரண டிக் டாக்  போன்ற apps மூலமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இதை பயன்படுத்தும் நபர்களே ஆபாசமாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர் டிக்டாக்கில்  சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் முதல், சீரியசாக நடித்தாலும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வரை அனைவரும் டிக்டாக்கில் கலந்து கட்டி தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்

இந்தியாவில் டிக்டாக், செயலியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கு விரும்பிகளை மெய்மறந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்..! மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் மற்றுமின்றி உலகளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது. டிக்டாக்கில் பதிவிடும் வீடியோக்களை அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக்டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் பணியாளர்கள் அழித்துள்ளதாக, பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெல்லே பல்டொஷா தெரிவித்தார். டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், மற்ற இதர செயலியில் 4 கோடி பேரும், தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் பெல்லே பல்டொஷா தெரிவித்தார்

டிக்டாக் செயலிக்கு முகநூல் போல கடவுச்சொல்லை பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளதாகவும், டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஆபாச வன்முறை வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக்டாக் செயலியை முன்வைத்து தற்கொலை, சாதி பிரச்சனை , ஆபாச பேச்சு, கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் எழுவதால் அதை கண்காணிக்க தனி பிரிவை உண்டாகியுள்ளதாக பெல்லே பல்டொஷா தெரிவித்தார்

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோ பதிவிட்டால் அவர்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் புதிய தொழில் நுட்பம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் பெல்லெ பல்டொஷா தெரிவித்தார். டிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிக்கும் அந்நிறுவனம் இந்தியாவில் இனி தடை விதிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது,