கல்யாணத்திற்கு மறுத்து கழட்டி விட்ட காதலன்..!! கடுப்பான காதலி செய்த தரமான சம்பவம்..!! என்ன செய்தார் தெரியுமா?

காதலன் முகத்தில் காதலி ஆசிட் ஊற்றி சிதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள விசாகபுரியில், இளைஞர் ஒருவர் மீது ஆசிட் வீசி, தாக்குதல் நடத்தப்பட்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட நபருடன், பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது ஆசிட் ஊற்றியது யார் என தெரியாமல், போலீசார் குழப்பத்தில் இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபருடன் இருந்த பெண்ணை விசாரித்தபோது, யாரோ நடுவழியில் ஆசிட் வீசிவிட்டார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எந்த தெளிவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. பலவிதமாக, அவர்கள் யோசனை நடத்தியதில், இறுதியாக, பாதிக்கப்பட்ட இளைஞனே, கண் விழித்து, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைக் கேட்டதும், போலீசாரே திகைத்துவிட்டனர். ஆம். குறிப்பிட்ட பெண்ணை, அந்த நபர் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தாராம். இருந்தாலும், அந்த பெண், திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவே, அதனை இளைஞர் ஏற்க மறுத்திருக்கிறார். இதன்பேரில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ம் தேதி இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என காதலி அழைத்துள்ளார்.

இதனால் காதலன் ஆசையுடன் புறப்நட்டுள்ளார். இருசக்கரவாகனத்தில் சென்றபோது, காதலனை ஹெல்மெட் கழட்டும்படி, காதலி கேட்டுள்ளார்.  அவரும் ஹெல்மெட் கழட்டியுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, காதலன் முகத்தில் அந்த பெண் ஊற்றியுள்ளார்.

இதில், இளைஞரின் முகம் சிதைந்துவிட்டதாம். இதன்பேரில், வழக்குப் பதிந்த போலீசார் குறிப்பிட்ட பெண்ணை கைது செய்தனர். வழக்கமாக, ஆண்கள்தான் பழிவாங்குவதில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக, பெண் ஒருவர் தனது காதலனை பழிவாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.