அக்கா கணவருடன் தனியாக பைக்கில் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18-ஆம் திகதி மாலை, தனது அக்கா கணவருடன் பைக்கில், சேலம் கடைவீதிக்கு புத்தகம் வாங்கச் சென்றுள்ளார். அதன் பின் இரவு 8 மணியளவில் வீடு திரும்பிய போது, மாமாங்கம் அருகே ஐடி பார்க் பகுதியில் 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்துள்ளனர். மாணவியின் அக்கா கணவரை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அவரிடமிருந்த 10ஆயிரம், வாட்ச், வெள்ளி கைச்செயின் ஆகியவற்றை பறித்துள்ளனர். அப்போது அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் மட்டும் கல்லூரி மாணவியை மறைவான புதருக்குள் குண்டுகட்டாக தூக்கிச்சென்று சீரழித்துள்ளான்.

அதன் பின்னர், 5 பேரும் தப்பியுள்ளனர். இதையடுத்து தீவிர ஆலோசனைக்குபின் 2 நாட்கள் கழித்து சேலம் பொலிஸ் கமிஷனர் சங்கரிடம் மாணவி புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், சூரமங்கலம் பொலிசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெயபிரகாஷ் (30), மணிகண்டன் (35), குமார் (35) உள்ளிட்ட 5 பேர் என தெரியவந்தது.

இவர்களில் ஜெயபிரகாஷ், கூட்டாளிகளான மணிகண்டன், குமார் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ரவுடி ஜெயபிரகாஷ் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், மதுகுடித்து ஜாலியாக இருக்க சாலையில்

பைக்கில் வரும் நபர்களை வழிமறித்து பணம் பறிப்போம். சம்பவத்தன்று, இளம்பெண்ணுடன் வந்த நபரை வழிமறித்தோம். அவரை தாக்கி பணம், வாட்ச், வெள்ளி கைச்செயினை பறித்தோம். அந்த பெண், அழகாக இருந்ததால் தனியாக இழுத்துச் சென்று சீரழிதேன் என வாக்குமூலம் அளித்தார்.