150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி..! அடுத்து நிகழ்ந்த அதிசயம்

இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி பெண் அதிசயமாய் உயிர் பிழைத்துள்ளார். புனே, சிங்காகட் கோட்டையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா, தனது கணவர் லாஹு இன்வேல் மற்றும் சகோதரர் சுரேஷ் உடன் சிங்காகட் கோட்டைக்கு சென்றுள்ளார். கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார், அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார். அழுகை சத்தம் கேட்ட சம்பவயிடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய

காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  ப்ரநிதாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.