மனைவியுடன் போனில் பேசி கொண்டே பரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளைக்கு நிகழ்ந்த விபரீதம்..!! பதற வைக்கும் சம்பவம்!

புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக புதுச்சேரியில் குடும்பம் நடத்திவந்தனர். சண்முகசுந்தரி தன் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவரை கடந்த வாரம் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்தார் புருஷோத்தமன். இந்த நிலையில், நேற்றிரவு புருஷோத்தமன் வேலைக்குச் சென்றுவிட்டு வரும்போது இரவு உணவுக்கு பரோட்டா வாங்கிவந்துள்ளார். வழக்கம்போல மனைவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்திருக்கிறார்.

பரோட்டாவைப் பிய்த்து வாயில் வைத்ததும் புருஷோத்தமனுக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேறு எதுவும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.