சூப்பர் மார்கெட்டில் அந்த சமாச்சாரத்தை திருடிய பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர்! சிசிடிவியில் சிக்கிய பரிதாபம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளர் போல வந்து பெண்கள் அந்த 3 நாட்களில் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட பொருட்களைத் திருடி சென்ற பெண் மென்பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதன் முறை தனது மகனை அழைத்துக்கொண்டு வந்த அந்தப் பெண் பொருள் எதையும் வாங்காமலே திரும்பிச் சென்றதாகவும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது அந்தப் பெண் சில பொருட்களை திருடி ஆடைக்குள் மறைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்ததாகவும் அங்காடி உரிமையாளர் தெரிவித்த்துள்ளார். அதன் பிறகு சில முறை அந்தப் பெண் வந்ததாகவும், அப்போதெல்லாம் ஆண் பணியாளர்கல் இருந்ததால் அந்தப் பெண்ணை சோதனையிட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடைசியாக அந்தப் பெண் வந்த போது தனது கடையில் இருந்த பெண் பணியாளரைக் கொண்டு சோதனையிடச் செய்ததாகவும்,அப்போது அந்தப் பெண் பேஸ்ட், நாப்கின் உள்ளிட்ட சில பொருட்களை திருடியது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சிக்கிக்க்கொண்ட அந்தப் பெண் தனது பெயர் தனஸ்ரீ பாட்டில் என்று தெரிவித்ததாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் திருடிய பொருட்களுக்கு பிறகு வந்து பணம் தருவதாகக் கூறி தனது தொடர்பு எண்ணைக்கொடுத்து விட்டுச்சென்றதாகவும்,

அங்காடி உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் மீண்டும் வராததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சி.சி.டி.வி.க் காட்சிகளையும் ஒப்படைத்தார். அதனைக் கொண்டும், அந்தப் பெண் அளித்த தொலைபேசி எண்ணைக் கொண்டும்

போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்தப் பெண்ணின் பெயர் போலி என்ற போதும் தொலைபேசி எண் உண்மையானது எனத் தெரிய வந்தது. அர்ச்சனா ஷா என்ற பெயருள்ள அந்தப் பெண்ணை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.