நேற்று கல்யாணம் செய்து இன்று பண்ற வேலையா இது? அதிர வைக்கும் நந்தினி!

மதுரையை சேர்ந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராளி நந்தினி தொடர்ந்து தனது அப்பாவுடன் இணைந்து பல முறை மது ஒழிப்புக்கு போராடி வந்துள்ளார். இதற்க்காக பல முறை கைது செய்யபட்டுள்ளார்,இதற்க்கிடையில் சட்டக்கல்லூரி மாணவியான நந்தினி காதலித்த குணா பாசுவை கடந்த ஜீலை 5 ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்வத்காக இருந்தார்.ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக, சில வருடங்களுக்கு முன்னதாக மது ஒழிப்புக்கு எதிராக போராடிய போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட நந்தினி போலீசார் மது விற்பனையை கண்டுக் கொள்வதில்லை என கூற, அதனை இத்துனை ஆண்டுகளுக்கு

பின்னர் வழக்காக பதிவு செய்து திருமணத்திற்கு முன்னதாக திட்டமிட்டு காவல் துறை கடந்த ஜீன் 27 ஆம் தேதி நந்தினி மற்றும் அப்பாவை கைது செய்து சிறையில் அடைக்க , தொடர்ந்து 13 நாட்கள் கழித்து முந்தைய நாள் வெளிவந்தவர் , நேற்று திருமணம் செய்து கொள்ள, இன்றைக்கு மீண்டுமாக போராட்டகளம் காணபோவதாக நந்தினி வெளியிட்ட வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.