அச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை! புகைப்பட ஆதாரம் இதோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவைதான் மக்கள் எல்லோருக்கும் மிகமிகப் பிடித்திருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரியாக இருப்பதாகக்கூறி சமூகவலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டில் வின்னராவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் லொஸ்லியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்த நபர் சேரன். அவரை அப்பா ஸ்தானத்தை வைத்திருக்கிறார். சேரனை எப்போதும் சேரப்பா என்று தான் அழைக்கிறார்.
எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், சேரனிடம் தான் சொல்கிறார். அவரது தோளில் சாய்ந்து தான் அழுகிறார். இதற்கு அவர் சொல்லும் முக்கிய காரணம் தனது தந்தையின் சாயலில் சேரன் இருப்பதாகக் கூறுவது தான்.

இந்நிலையில், அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஏறக்குறைய சேரனின் ஜெராக்ஸ் மாதிரி தான் இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சியில் இந்த புகைப்படத்தை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.