தன்னுடைய தவறால் கண்முன்னே உயிரிழந்த கணவன், குழந்தையை பார்த்து கதறி அழுத மனைவி.! மனதை உலுக்கும் சம்பவம்!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவருடைய நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை சந்திப்பதற்காக சொகுசு காரில் சந்தோசமாக புறப்பட்டுள்ளனர். சுப்புராஜின் மனைவி கிருத்திகா அதிவேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார். தர்மபுரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதி, இருமுறை சுழன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் சுப்புராஜ், அவரது மூன்று வயது குழந்தை விவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் காயங்களுடன் காரில் சிக்கி தவித்த சுப்புராஜின் மனைவி கிருத்திகா

நண்பர் மகேந்திரன் அவரது மனைவி அனிதா மற்றும் மகேந்திரனின் 3 வயது குழந்தை கிருஸ்வினாயக் ஆகிய 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்த பின்பு, கணவன் குழந்தையை பார்த்து கிருத்திகா கதறி அழுதுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.