குரு பெயர்ச்சி 2020 இல் இந்த ராசிக்கு தான் ராஜயோகம்! ஆட்டிப்படைக்கும் சனியும் அள்ளிக் கொடுக்க காத்திருக்கின்றார்?

குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது.இதை பொறுத்துதான் வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள் நிறைந்திருக்குமா என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.ஜாதக ரீதியாக மேஷம்,கடகம்,துலாம், மகரம் தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் ஹம்யயோகம் அமைகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும் அந்த தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும்.மேலும் இந்த யோகம் மனிதவாழ்வின் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். 2020 ஆம் ஆண்டில் லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது இந்த யோகம் அமைகிறது.

இந்த குருப்பெயர்ச்சியால் மேஷ லக்னகாரர்கள் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அடையப்போகும் நன்மைகளை பார்க்கலாம்.எட்டாவது வீட்டில் அஸ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்ய ஸ்தானத்தில் பலமாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். தனுசு லக்னம் மூலம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் மேஷம் லக்னம் அஸ்வினியில் அமையப்பெற்றவர்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது.குருபகவான் தனது பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் லக்னங்களைப் பார்வையிடுகிறார்.

உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், தைரியம் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் அற்புதங்கள் நடக்கப் போகிறது. குரு பகவான் ஒன்பதாவது வீட்டில் பத்தாவது வீட்டு அதிபதியான சனியோடு சேர்ந்து அமர்வது மேஷம் லக்னகாரர்களுக்கு தர்மகர்மாதி யோகத்தை தரப்போகிறார்.உங்களின் வீடு சந்தோஷங்களினால் நிறையப்போகிறது. சுபகாரியங்கள் அதிகம் நடக்கப் போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும்.

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இணைந்து ஒன்பதாம் வீட்டில் இணைவது நல்ல யோகம். குருபாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து பார்ப்பதால் பரணி நட்சத்திரத்தில் அமர்ந்த மேஷ லக்னகாரர்களை பார்ப்பது சிறப்பு.குரு ஒன்பதில் அமர்ந்து சுக்கிரன் நட்சத்திரமான பரணியை பார்ப்பதால் புகழ் செல்வம் செல்வாக்கு உயரும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நிறைவேற வாய்ப்பு உள்ளது.