சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியின் சின்ன வீடு !! நெல்லையே அசந்து போய்க் கிடக்குது போங்க !! அம்புட்டு அழகு !!

தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள்.செல்வரத்தினம் மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் கடைகளை பிரம்மாண்டப்படுத்தி வருகிறார். இந்தக் கடைகளை நாடு முழுவதும் பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்கி வருகிறார் அருள்.


எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சிக்கு தனி சர்டிபிகேட் தேவையில்லை. ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார்.கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் சரவணன் கலந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு சினிமா ஆசை இருக்கிறது என்று பேசப்பட்டது.


விளம்பரங்களில் பிரம்மாண்டம் காட்டிய அருள் அடுத்து இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளார். சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய் பல துணிக்கடை மாளிகைகள் இருப்பதை போல பலகோடி ரூபாய் மதிப்பில் சில சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் அருள். அதில் தான் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் அவர். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.


இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் அறையில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் விலை உயர்ந்த சேர்கள் போடப்பட்டுள்ளன.