கட்டிடத்தை லட்சக்கணக்கான வாடகைக்கு விட்ட நகைச்சுவை நடிகர் செந்தில்! அங்கு சென்று பார்த்தபோது தெரிந்த உண்மை

நடிகர் செந்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு சென்னை சாலிகிராமத்தில் 10 அறைகள் கொண்ட சொந்தமான கட்டிடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு

சகாயராஜ் என்பவர் மாதம் ரூ 2,00,000 வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அபார்ட்மெண்ட் நடத்தி வந்தார். இந்நிலையில், சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தரவில்லை. தொடர்ந்து வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த கட்டிடத்தை தனது சொந்த கட்டிடம் எனக்கூறி சகாயராஜ்

அதில் உள்ள 7 அறைகளை லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு ஒப்பந்தம் போட்டதை கண்டுபிடித்த செந்தில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செந்தில் பொலிசில் புகாரளித்த நிலையில் பொலிசார் தலைமறைவாக இருந்த சகாயராஜை கைது செய்தனர். இதனிடையில் சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.