பிரபல நடிகை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு! அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் செய்த அதிரடி செயல்

கேரளாவின் சோலார் பேனல் மோசடி வழக்கில் பிரபல நடிகை சரிதா நாயருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் ஜாமீன் வாங்கியதுபரபரப்பாக பேசப்படுகிறது. கேரளாவில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கோட்டயத்தைச் சேர்ந்த பிரபல நடிகை சரிதா நாயர் மற்றும் அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோரை கேரளா பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள், கடந்த 2008-ஆம் ஆண்டு கோவை வடவள்ளியில் ஐ.டி.எம்.எஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

அப்போது தமிழகத்தில் கோயமுத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் தியாகராஜிடம் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி 28 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். ஆனால் சரிதா நாயர் காற்றாலை அமைத்து தராமல் மோசடி செய்துவிட்டதாக கூறி, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அவர்களது மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, இதே போன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியைச்

சேர்ந்த ஜோயோ என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோயமுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன் படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய மூன்று பேரும் குற்றவாளி என்று அறிவித்து மூன்று பேருக்கும் மூன்றாண்டுச் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எப்படியும் சரிதா அடுத்த சில நாட்களுக்கு சிறையில் இருப்பார், அதன் பின்பு ஜாமீன் கிடைக்கலாம் என்று நினைத்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரிதா நாயர் உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீன் வாங்கிவிட்டனர். மூன்று பேருக்கும் தலா இரண்டு பேர் ஜாமீன் கையொப்பம் போட்டதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.