ஏற்கனவே 5 ஹோட்டல்கள்..! இப்போது மேலும் 2 ஹோட்டல்கள்..! மதுரையை கலக்கும் காமெடி நடிகர் சூரி! வைரலாகும் வீடியோ

சூரி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த காமெடி நடிகர். இவர் சமீப காலமாக பெரிதும் எந்த ஒரு காமெடி கதாபாத்திரத்திலும் பார்க்க முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வந்தது.

சூரியும் ஹீரோவாக களம் இறங்கவுள்ளார், மதுரையில் ஏற்கனவே 5 ஹோட்டல்கள் நடத்தி வரும் சூரி தற்போது மேலும் 2 சைவ, அசைவ உணவகங்களை திறந்துள்ளார். இதன் மூலம் மதுரையில் மட்டும் சூரிக்கு 7 ஹோட்டல்கள் சொந்தமாகியுள்ளன. சூரி கட்டியுள்ள புதிய இரண்டு ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது மதுரைக்கு சென்றுள்ளார். காரணம் நடிகர் சூரி மதுரையில் புதிய உணவகம் திறந்துள்ளார், அதன் திறப்பு விழாவிற்கு சிவகார்த்திகேயன் வந்துள்ளார். அவரை கண்டதும் மதுரை மக்கள் அவரை சூழ்ந்து ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ