ஏழரை சனி முடியப்போகும் ராசிகள் இதுதான் !! உங்க ராசி இருக்கான்னு பாருங்க !! ஜாக்கிரதையா இருங்க !!

சனி பெயர்ச்சி என்பது நமக்கான கஷ்ட காலமாக கருதுவது தவறு. அவர் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சரி செய்யவும், நம்மை வழிபடுத்தவும் வருகின்றார்.நவகிரகங்களின் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சிக்கு அதிகம் பயப்படுகின்றார்கள். ஏனெனில் சனி ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார். இந்த கால காட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனி பகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும். சாதாரண பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் சனிப் பெயர்ச்சி 2020ல் நடக்க இருப்பதாக இரு தேதிகள் குறிப்பிடுகின்றனர்.

அதில் 2020 சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகின்றது. சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்க்க உள்ளார்.

இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம். கடந்த ஏழரை வருடங்கள் சனியின் பார்வையால் அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசியினர், 2020 சனிப் பெயர்ச்சி மூலம் துயரங்களிலிருந்து விடுபட உள்ளீர்கள். விருச்சிக ராசிக்கு சங்கடங்கள் தீரும் காலம் தொடங்க உள்ளதால், தொழில், வியாபாரம் வளர்ச்சி காணும். பல ஆண்டு காலமாக உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி வந்தவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். பல்வேறு நன்மைகள் ஏற்படுவதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். இந்த சனிப் பெயர்ச்சி மூலம் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிவதால், வாழ்விலும், தொழிலும் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசியினர் இதுவரை அடைந்துவந்த இன்னல்கள் தீருவதோடு, பண வரவு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு தருவார். இதுவரை திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலமும் ஏற்படும். ஏழரை சனியின் கடைசியான பாத சனி விலகுவதால் ஆரோக்கியம் மேம்படும். கால்வலி பிரச்சினைகள் தீரும். இதுவரை ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் தீர்ந்து லாபமான நிலை ஏற்படும். இதற்காக சனி பகவானுக்கு நன்றி சொல்லி வணங்கும் பொருட்டு திருநள்ளாறு சென்று வருவது நல்லது. மகர ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசிக்கு ஆட்சி பெற்று அமரப்போவதால் 30 வயதைக் கடந்தவர்கள் முன்னேற்ற காலத்தை காண போகிறார்கள்.

சனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ஆகியவற்றின் மிது விழுகிறது. தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். முன்னேற்றம் கிடைக்கும். சகோதர / சகோதரிகளுக்கு நன்மை செய்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள். அரசு தொடர்பாக ஆதாயம் கிடைக்கும். விபரீத ராஜயோக நிலை இருக்கும். இதுவரை லாப சனியாக இருந்த நிலையில் தற்போது விரய சனியாக அமர்வதால், உங்களின் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் செலவு ஏற்படக் கூடிய காலம். அது சேமிக்கு வகையில் அதாவது முதலீடுகளாக இல்லாமல் தேவையற்ற செலவாக இருக்கும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பொங்கு சனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும்.