டிக் டாக் காதலியுடன் ஒன்றாக சேர்ந்து இடையூறாக இருந்த மனைவியை கொள்ள முயற்சித்த இளைஞர்…!!! பரபரப்பு சம்பவம்

டிக்டாக் செயலியில் மீண்டும் ஒரு குடும்பம் சீர்குலைந்த சம்பவம். ஆந்திராவை சேர்ந்தவர் சத்யராஜ் இவர் விஜயவாடா அனல் மின் நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டில் அனுராதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்க்கை எந்த ஒரு கசப்பும் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று புயல் போல் வந்தது டிக்டாக் செயலி. சத்யராஜ் டிக்டாக் செயலியில் மூழ்க ஆரம்பித்தார். அந்த செயலியில் அதிகமாக நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

திடீர் என்று சத்யராஜ் தன் மனைவியிடம் சரியாக பேசாமல் செல்போன் தான் வாழ்க்கை என்று இருந்தார். சத்யராஜ்க்கு டிக்டாக் செயலி மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாள் அடைவில் காதலாக மாறியது. அதன் பின் மே மாதம் சத்யராஜும் அந்த பெண்ணும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் . திருமணம் செய்த புகைப்படங்களை டிக்டாக் செயலியில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த சத்யராஜின் மனைவி அனுராதா கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது பெற்றோர்க்கு அறிவித்து விட்டு இப்ராஹிம் பட்டணம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கணவருக்கு எதிராக கொடுத்தார்.

அந்த புகாரில் டிக்டாக் பெண்ணுடன் காதல் செய்து இன்று திருமணம் செய்து உள்ளார் தனது கணவனை திரும்ப என்னுடன் வாழ வையுங்கள் என்று கூறி இருந்தார் அனுராதா. அந்த புகாரை ஏற்று கொண்ட காவல்துறையினர் சத்யராஜையும், அவர் புதிதாக திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணிடமும் விசாரணை செய்த்து அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

அந்த அறிவுரையின் படி தன் முதல் மனைவி அனுராதாவுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தார் சத்யராஜ். மறுபடியும் தன் காதல் மனைவியுடன் சேர்ந்து கொண்டு அனுராதவை கொடுமை படுத்தினர் சத்யராஜ் என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் சத்யராஜ் அந்த பெண்ணுடன் சேர்ந்து கொண்டு அனுராதவை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார் கொடுத்துள்ளார். இன்னும் எதனை பேர் வாழ்க்கையை கெடுக்க போகிறது என்று தெரியவில்லை இந்த டிக்டாக் செயலி.