காலம் இப்போ மாறிடுச்சி… சித்ராவுடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோவை வெளியிட்ட பண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் சமீபத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வரவேற்பும், சமூக வளைத்தளத்தில் பரவி வைரலாகியும் உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூன்று ஜோடிகளின் ஒருவர் முல்லை, கதிர்.

இந்த காப்பாத்திரத்தில் சித்ராவும் கதிரும் நடித்து வருகின்றனர். இவர்கள் ரசிகர்கள் விரும்பும் ஜோடியாக இருந்தாலும் இவர்களுக்கு இடையே ஒத்து வரவில்லை. இருவருக்கும் சண்டை, சீரியலை விட்டு விலக போகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவி வந்தன.

இதற்கு ஏற்கனவே சித்ரா பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருந்த நிலையில் தற்போது குமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதுவும் சித்ராவுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். எங்களுக்குள் இருப்பது நண்பர்களுக்கு இடையே இருக்கும் சிறு சிறு சண்டை தான் என கூறியுள்ளார். இப்போது கொடுத்து வருவது போல தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் எனவும் அந்த வீடியோவில் கேட்டு கொண்டுள்ளனர்.