வில்லன் நடிகர் அருண்பாண்டியன் மகளுக்கு முதல் படத்திலேயே கிடைத்த அதிர்ஷ்டம்…

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக கலக்கிய அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தான் நடித்த முதல் படத்திற்கு விருது வாங்கி அசத்தியுள்ளார். நடிகராகவும், முக்கியமாக வில்லனாக களமிறங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார். மொடலிங் துறையில் இருந்த இவர் தனது தந்தைக்கு உதவியாகவும் இருந்து வந்தநிலையில், தும்பா என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. காடுகளை பாதுகாப்பது, விலக்குகளை பாதுகாப்பது என்பதை சொல்லும் ஒரு கருத்துப்படமாக இருந்ததால் குழந்தைகளைக்

கூட மிகவும் கவர்ந்தது என்றே கூறலாம். தற்போது பிரபல ரிவி நடத்திய விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை கீர்த்தி பாண்டியன் தனது முதல் படமான தும்பா படத்திற்கு பெற்றுள்ளார்.