தான் வளர்த்த பூனையை தொ ங்க விட்டு வீடியோ வெளியிட்ட இளைஞன்… அதற்கு கூறிய ப கீர் காரணம்..!

அவசரமான உலகில் நாமெல்லாம் வசித்துவருகிறோம். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவுக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். அதையும் ஆக்கப்பூர்வமான விசயத்துக்கு பயன்படுத்தினால் மகிழலாம். ஆனால் அழிவுப்பாதையும் கொண்டுசெல்லவே சோசியல் மீடியாக்களை இந்த தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர்.

அதிலும் இந்த தலைமுறையினரை டிக்டாக் மோகம் ரொம்பவே படுத்தி எடுக்கிறது. இதனால் இவர்கள் செய்யும் செயல்கள் ரொம்பவே அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் பற்றித் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நெல்லைமாவட்டத்தின் பழவூர் பக்கத்தில் இருக்கும் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது தந்தை மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். தங்கராஜ் அடிக்கடி மாடுகளுடன் டிக்டாக் வீடியோ வெளியிடுவார். ஆனால் அவை சரியாக லைக் விழாமல் போனது. இதனால் டிக்டாக்கில் அதிகம் பார்வைகளைப்பெற என்ன செய்யலாம் என நீண்டகாலமாக யோசித்துக்கொண்டிருந்தார் தங்கராஜ்.

டிக்டாக் மோகத்தில் தான் ஆசையாக வளர்ந்த பூனையை தூ க்கி ல்போட்டு அது து டித்து சா வதை வீடியோவாக டிக்டாக்கில் பதிவேற்றியிருக்கிறார் தங்கராஜ். டிக்டாக்கில் வீடியோவைப் போட்டுவிட்டு லைக்கிற்கு காத்திருந்தார் தங்கராஜ். அந்தநேரத்தில் வாசலில் கதவைத்தட்டும் சப்தம் கேட்டது. பூனையை இந்நிலைக்கு ஆக்கியதால் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்ய வந்திருந்தனர் போலீஸார். டிக் டாக் மோகத்தில் தங்கராஜ் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.