நான் தப்பு பண்ணினா தில்லா சொல்லிட்டு தான் பண்ணுவேன்..!! சாக்கடைங்க உங்களுக்கு அறிவு வேணா..? வனிதாவின் அதிரடி வீடியோ..?

தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுவது வனிதாவின் 3வது திருமணம். இந்த திருமணத்திற்கு பல தரப்புகளும் எதிர்ப்புகளும் ஆதரவும், தெரிவித்து வருகின்றனர். வனிதா நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்கள் இவருடன் வசித்து வரும் நிலையில் தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து உள்ளார்.


இவர் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது. இதற்கு பீட்டர் பால் ஏற்கனவே தன்னை திருமணம் செய்ததாக கூறி அவரது முதல் மனைவி புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தத் திருமணம் மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த வகையில் வனிதா தனது யூடியூப் வீடியோ பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வனிதா நான் எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்று எனக்கு தெரியும், என் கணவர் எப்படி என்று எனக்கு தெரியும், என் பிள்ளைகள் என் மீது அன்பாக தான் இருக்கிறார்கள் யார் மீதும் யாரும் கருணை காட்ட வேண்டாம்.

கொரனோ காலத்தில் இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சினையா.? உங்கள் பிரச்சினையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், என்று தைரியமாக விலாசி ஒரு பேட்டி அளித்துள்ளார். இவர் லட்சுமி ராமகிருஷ்னனையும் விட்டுவைக்கவில்லை. இதோ அந்த வீடியோ