விஜய்டிவி புகழ் ஜல்சா குமாருக்கு திருமணம் முடிந்தது..! அடேங்கப்பா இவுங்க தான் பொண்ணா..? பாக்க ஹீரோயின் மாதிரி இருக்காங்களே..!

தற்போது உள்ள நிலையில் நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைகோதி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. மேலும் விஜய் டிவி ரசிகர்களின் மனதில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறது. அந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரசனைக்குரிய விசயங்கள் அந்த சேனலை பட்டி,தொட்டியெங்கும் ரீச் ஆக்கியிருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியில் வருபவர்களும் விரைவிலேயே பெரியளவில் ரீச் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பிரபலமானவர்களில் ஒருவரான யோகேஷ்க்கு இந்த லாக்டவுண் நேரத்தில் திருமணம் நடந்திருக்கிறது.

கரோனா உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தினமும் கூடிவருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான திருமணங்கள் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து சிம்பிளாக நடந்து வருகிறது. அப்படி வெகுசிம்பிளாக நடந்துள்ளது விஜய்டிவியின் யோகேஷ் திருமணம். ஞாயிறுதோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர்தான் யோகேஸ்.

இந்த சீசனில் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார், நடிகை ரம்யா பாண்டியன், ஈரோடு மகேஷ், ஆஹவன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இதில் பங்கேற்ற யோகேஷ் நித்தியானந்தா கேரக்டரை பிரதிபலிக்கும் ஜல்ஸா குமார் கேரக்டரில் மக்களிடம் அதிக ரீச் ஆனார். கடந்த 26ம் தேதி ஐல்சா குமாருக்கு திருமணம் நடந்தது. அந்தப்  இப்போது புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.  அந்த மணமக்களின் புகைப்படம் இதோ,,,