தங்கத்தை விட விலைமதிப்பு கொண்ட இது என்ன தெரியுமா? கொரோனாவையும் கட்டுப்படுத்துமா..?

கடந்த சில மாதங்களாக சிவப்பு பாதரசம் என்கிற சொல் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது. உண்மையில் சிவப்பு நிற பாதரசம் உள்ளதா? அதனுடைய பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்

இந்த சிவப்பு நிற மெர்குரி ஒரு கிராம் ரூபாய் 10,000 விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இது உண்மையா என்று பலரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.  தங்கத்தை விட விலைமதிப்பு கொண்ட இந்த சிவப்பு பாதரசம்,

சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படும் என்றும் அதே நேரத்தில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் பயன்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.  பார்ப்பதற்கு சிவப்பு நிற திரவம் போல் இருக்கும் இந்த பொருள் குறித்து, இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. சிவப்பு பாதரசம் பழைய மோனோக்ரோம் தொலைக்காட்சி மற்றும் பழைய காலத்து எப்.எம் ரேடியோக்களில் ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து இருக்கும் என்கிற சில புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. தங்கத்தை விட விலை அதிகம் என்று கூறப்படும் இந்த மர்ம திரவம் குறித்து மேலும் விசாரனைகள் நடந்து வருகிறது.

சாதாரண பாதரசம் வாங்க ஒரு கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவாகும், அது விஷத்தன்மை வாய்ந்தது. அதனால், சிவப்பு பாதரசம் இருப்பது உண்மையா? பாதரசத்துடன் கூடிய கலவையாக இருந்தாலும், இதற்கு இவ்வளவு செலவு செய்யக்கூடாது. இப்போதைக்கு, இது ஒரு மோசடி போல் இருப்பதாக பலரும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.