Tuesday, September 21, 2021
HomeASTROLOGYஆடி மாதத்தில் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..? உங்கள் ராசியின் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்...

ஆடி மாதத்தில் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..? உங்கள் ராசியின் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இதோ..!

ஜூலை 16, 2020 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக் கூடிய இந்த காலம் தான் ஆடி மாதம் என்று சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் ஆடிமாத ராசி பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்க போகின்றது என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சூரியன் மாறுகிறது, இது தாயார் மற்றும் வீடு, வசதிகள், சுக ஸ்தானத்தை குறிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் விரைவாகத் தொடங்க விரும்புவீர்கள், இருப்பினும் சில சாதகமற்ற சூழலால் சற்று தாமதமாகலாம். இதன் காரணமாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை மீது ஆக்ரோஷமும் விரக்தியும் செலுத்தக்கூடும். இது உங்கள் மன அமைதியையும் குடும்ப சூழ்நிலையையும் சீர்குலைக்கும். உத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பற்றதாக உணரலாம், குறிப்பாக நிதி மற்றும் உங்கள் சொந்த திறன்களை சந்தேகிக்க ஆரம்பிக்க நேரிடும்.

உங்களுக்கு விருப்பமில்லாத சில பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்,  எனவே, உங்கள் பணியிடத்திற்குள் எந்த மோதல்களையும் தவிர்க்கவும்.இந்த காலகட்டத்தில், நிலம் மற்றும் சொத்து விஷயங்களும் தாமதமாகலாம், மேலும் பலனளிக்காது, எனவே அவற்றை இப்போதே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இது நிறைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வழிவகுக்கும்.

பரிகாரம்: செப்பு பானையில் தண்ணீரை நிரப்பி, அதில் ரோஜப்பூக்களை போட்டு உங்கள் வாழ்க்கை அறையில் வைத்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள், செயல்கள் ஏற்படும்.

​ரிஷபம்: உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அதாவது முயற்சிகள், தைரியம் மற்றும் இளைய சகோதரர் ஸ்தானத்தில் சூரியன் மாறுவதால் உங்கள் தைரியம் மற்றும் வீரம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். நீங்கள் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் விவேகத்தின் அடையாளம். சூரிய பெயர்ச்சியால் நீங்கள் விரும்பிய குறிக்கோள்களையும் லட்சியங்களையும் அடைவதற்கான முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபடுவீர்கள். உங்கள் பணியில் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பசுக்களுக்கு வெல்லம் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பம், தன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். சில நேரங்களில் நீங்கள் கடுமையான பேச்சை உபயோகிக்க நேரிடும். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல்களையும் தொந்தரவுகளையும் உருவாக்கும். சூரியன் ஒரு வறண்ட கிரகம் அது சேமிப்பு இல்லத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த காலகட்டத்தில் தன வரவில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம்.

பரிகாரம்: சூரிய உதயத்தின் போது “காயத்ரி மந்திரம்” சொல்வதால் நல்ல பலனைத் தரும்.

​கடகம்:  கடக ராசிக்கு சொந்த வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் உயர்வுக்கு வழிவகுக்கும். இது உங்கள் தலைமை மற்றும் நிர்வாக குணங்களை மேம்படுத்துகிறது. உங்கள் செயலை திட்டமிட்டு அணுகுவீர்கள். நிலுவையில் பணிகளை முடிக்க இது உங்களுக்கு உதவும். சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும். இருப்பினும், உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது குடும்பச் சூழலை சீர்குலைக்கும். உங்களுக்கு இருதய நோய்கள், இரத்த அழுத்தம் இருப்பின் சிறிய உடல் கோ ளாறு ஏற்பட்டாலும் அலட்சியம் வேண்டாம்.

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

​சிம்மம்: ராசிக்கு 12ம் வீடான விரய மோட்ச ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வீட்டில் செலவுகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஏற்படக்கூடும். வயதானவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த பெயர்ச்சி உங்கள் நம்பிக்கையை அசைத்து பார்க்க வழிவகுக்கும், உங்கள் சொந்த திறமையில் சந்தேகம் ஏற்படலாம், இது உங்கள் சுயமரியாதையை குறைக்கும். பணியிடத்தில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தேடுவது சங்கடத்தை தரும்.

​கன்னி:  உங்கள் ராசிக்கு பதினொன்றாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் மிகவும் சாதகமான பயணமாக கிடைக்கும். நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அல்லது பன்னாட்டு நிறுவனத்திலும் பணிபுரிந்தால், நன்மைகள் மற்றும் இலாபங்களும் ஏற்படும். மூத்தவர்கள், தந்தை, அரசாங்கத்திடமிருந்து நன்மைகளைப் பெறலாம். வியாபாரத்தில் லாபத்தையும் வருமானத்தையும் தர வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல லாபங்களையும் வெற்றிகளையும் தரும்.

பரிகாரம்: தினமும் காலையில் “சூர்ய அஷ்டகம்” ஸ்தோத்திரத்தைப் பாடி வர நல்ல பலன்களைத் தரும்.

​துலாம்:  துலாம் ராசிக்கு 10ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக இருக்கும். இந்த அமைப்பு உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை உயர வாய்ப்புள்ளது. நிலுவையிலுள்ள பணிகளை முடிக்கவும், புதிய பணிகளை செயல்திறனுடன் நிறைவேற்றவும் இந்த அமைப்பு உங்களுக்கு உதவக்கூடும். புதிய பதவிகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும், புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது.

பரிகாரம்: தந்தை அல்லது உங்கள் குரு, நபர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். அதனால் குரு பகவானை வணங்குவது நல்லது.

​விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் சில தேவையற்ற தாமதங்களையும் தொழிலில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். உங்கள் தந்தை அல்லது உங்கள் வழிகாட்டி நபர்களுடன் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், சட்டத்தை மீறுவது பெரிய சிக்கலில் கொண்டு செல்லும். தொழில், வேலையில் தவறான குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளலாம். பேச்சில், செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் துணைவியுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் தினமும் பாடுவதால் மன தைரியம் கூடும், ஆபத்துக்கள் நீங்கும்.

​தனுசு:  உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி ஆவதால் சற்று கடினமான கால கட்டமாக இருக்கும். சில தேவையற்ற இழப்புகள் ஏற்படலாம், இது நிதி தொடர்பாக சில பாதுகாப்பின்மையை உருவாக்கக்கூடும். தொழில் ரீதியாக, மூத்த அதிகாரிகள் அல்லது அரசாங்கத்திடமிருந்து பிரச்சினைகள் இருக்கலாம். மேலும், உங்கள் எதிரிகள் உங்கள் பாதையில் தடைகளை உருவாக்க முடியும், இது உங்கள் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: வில்வ மர வேர் சிறு துண்டை வெள்ளை நூலில் கோத்து கழுத்தில் அணிந்து கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

மகரம்:  உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம். பணியாளர்கள் அவர்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். தொழில் ரீதியாக, உங்கள் கூட்டாளிகளுடன் மோதல் ஏற்படலாம், இது சில மன அழுத்தங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்திலும், துணையுடனும் விவாதங்கள் ஏற்படலாம். உடல் நல பிரச்னை ஏற்படலாம் கவனம் தேவை.

கும்பம்:  ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் நல்ல பலன்கள் தரக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் போட்டித் திறன்கள் சிறப்பாக இருக்கும், இது வேலை, தொழில், வியாபாரத்தில் போட்டி போட்டு முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் விஷயமாக பயணங்கள் லாபத்தை தரும். உங்கள் உடல் ஆரோக்கியமும், உறவு நிலையும் முன்னேற்றம் அடையும்.

பரிகாரம்: ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்குவது நன்மை பயக்கும்.

மீனம்:  ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் திட்டமிடல் பெரியளவில் வெற்றியதை தராமல் போகலாம். இதனால் தொழில், வேலையில் திட்டமிட்ட நேரத்தில் பணியை முடிப்பதில் காலதாமதம் ஆகலாம். மேலதிகாரிகளுடன் சில சிக்கல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவை தேவையற்ற மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் விழிப்புணர்வும் மற்றும் நம்பிக்கையும் மிக அவசியம். . உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் சில மனக்கசப்புகள் மற்றும் ஈகோ ஏற்படுத்தும்.

திருமண உறவில் எளிதில் எரிச்சலையும் அடைய நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அமில அல்லது இரைப்பை பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் சில சிக்கல்களைத் தரும். எனவே, உணவு விஷயத்தில் கவனம் தேவை. பரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம், ஸ்லோகம் சொல்வதால் நற்பலன்கள் பெறலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments