சுகத்தை தரும் சுக்கிர பெயர்ச்சி..! இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்..! தி டீர் வி பரீ த ராஜயோகம் யாருக்கு தெரியுமா..?

ரிஷபம் மற்றும் துலாம் ராசி அதிபதியான சுக்கிர பகவான் ஆகஸ்ட் 1ம் திகதி சனிக்கிழமை காலை 5.09 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுனத்தில் ராகு, புதன் கிரகங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார்.

அதே சமயம் தனுசு ராசியில் குரு மற்றும் கேது சஞ்சரிக்கின்றனர். தேவர்களின் குருவாக குரு பகவானும், அசுரர்களின் குருவாக சுக்கிர பகவானும் குறிப்பிடப்படுகின்றனர். பொதுவாக இருவரும் எதிரி கிரகங்கள். ஆனால் தனித்தனியாகப் பார்த்தால் இருவரும் சுப கிரகங்கள்.

இந்த இரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் 7ம் இடத்தில் அமைந்து எதிர் எதிராக சமசப்தக யோகம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்க உள்ளது.

​ரிஷபம்: இந்த சுக்கிர பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசிக்கு இரண்டாவது இடத்தில் சுக்கிரன் இருப்பார். இதனால் குரு சுக்கிரன் சமசப்தக யோகம் அனுபவிக்க உள்ளனர். இந்த யோகத்தால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் மறக்கமுடியாத தருணத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

உங்கள் பேச்சில் இனிமை இருக்கும், இதனால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அழகாக இருப்பதற்கும் கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். ரிஷப ராசியினரின் குழந்தைகளின் செயல்பாடு மகிழ்ச்சியையும், லாபத்தையும் தரும் வகையில் இருக்கும். லாபகரமான செய்திகளைக் கேட்கலாம்.

​மிதுனம்: ஜென்ம ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சஞ்சாரமும், குருவின் பார்வையும் ஏற்படக்கூடிய சமசப்தக யோகம் மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரும் விதமாக அமையும்.

இதனால் மாணவர்கள் கல்வியில் மேம்படுவார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். புதிய வருமான ஆதாரங்களையும் பெறுவீர்கள். உங்கள் வணிக வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் அமையும்.

​சிம்மம்: சிம்ம ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்கிறது. சமசப்தக யோகம் இந்த ராசிக்கு பல நன்மைகளை தருவதாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வேலையில் புதிய திறமையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். பெண்களுக்கு அரசு திட்டங்களின் பணமும் சலுகைகளும் கிடைக்கும்.

​துலாம்: ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் செல்லப் போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் நாட்பட்ட நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் அறிவுத் திறன் அதிகரிக்கும் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பின் சாதகமான பலனைப் பெறலாம்.

உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், திருமணமானவர்களின் வாழ்க்கை நெருக்கமாகவும் இருக்கும். இந்த காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சமசப்தக் யோகா உங்கள் அறிவுசார் திறனை பலப்படுத்தும்.

​தனுசு:  உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன் மாறுகிறது. இதனால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர், நண்பருடன் முரண்பட்டிருந்தால் உறவு சுமுகமாகும்.

பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் குடும்பத்தில் புதிய உறுப்பினரை எதிர்பார்க்கலாம், இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.