15 வயதில் சேலை அணிய ரி கர்சல் எடுக்கும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா..! நடிகையான பின் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் அஜித் படம் என்றாலே திருவிழா காட்சியளிக்கும் தியேட்டர்கள். ரசிகர்கள் பட்டாளத்தை தாண்டி குடும்ப பாங்கான அதுவும் குடும்ப படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தும் வருகிறார் தல அஜித். அஜித்தின் கடைசியாக வெளியாக நேர்கொண்ட பார்வை, விசுவாசம் இருப்படங்களும் பெரும் வெற்றியை பெற்று சாதனை பெற்றது. விசுவாச படத்தில் அஜித்தின் குழந்தையாக நடித்து புகழ் பெற்று வருபவர் நடிகை அனிகா.

அஜித் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா சமீபகாலமாக இணையத்தில் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று பல விமர்சனங்கள் வந்தாலும் போட்டோஹூட் எடுப்பதை நிறுத்தவில்லை. அதன்பயனாக மலையாள படம் ஒன்றில் நடிகையாக கமிட்டாகியுள்ளார் அனிகா. பள்ளி, கல்லூரி காதல் கதையை மையமாக எடுக்கபடும் படம் தான் அது.

அப்படத்தில் கமிட்டான பிறகு சேலையை கட்ட கற்று கொண்ட அனிகா நடிகையாக என்ன செய்யவேண்டும் அதற்காக ரிகர்சல் செய்தும் வருகிறார். இந்நிலையில் அவர் சேலையணிந்து இளம் நடிகையை போல் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனிகாவின் புகைப்படத்தை பார்த்து வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.