எல்லாத்துக்கும் அம்மா பிடிக்கும் என்று சொன்ன குழந்தை.. இறுதியில் வைத்த ட்விஸ்ட்டை பாருங்க.. அழகிய காட்சி!

குழந்தை ஒன்று அப்பாவை பிடிக்கும் என சொல்லும் காட்சி இணையத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில், தாய் ஒருவர் தனது பெண் குழந்தையிடம், உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார் என கேட்கிறார், அதற்கு அந்த குழந்தை அம்மா என பதில் சொல்கிறது. அதனைத்தொடர்ந்து உனக்கு துணி யார் போட்டு விடுகிறார் என கேட்கிறார், அதற்கு அம்மா என பதில் சொல்கிறது. இப்படி குழந்தைக்கு தாய் செய்யும் அனைத்தையும் கேட்கிறார். அதற்கு எல்லாம் அம்மா என்றே பதில் சொல்கிறது.

இறுதியாக உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை ”அப்பா” என சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்கிறது. இந்த காட்சி இணையத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.