90ஸ் கிட்ஸ் அம்மி.. அம்மி.. அம்மி மிதிச்சு.. மெட்டி ஒலி பாடலுக்கு ஆடிய சாந்தியா இது..? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..!

தற்போது உள்ள நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் பார்ப்பது தான் தினமும் வழக்கமாக வைத்துள்ளதனார். இந்நிலையில் 90ஸ் kids-களின் பேவரட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. அதில் வரும் டைட்டில் சாங்கான அம்மி, அம்மி, அம்மி மிதித்து பாடல் செம ஹிட்.

அந்த பாடலுக்காகவே சீரியல் பார்க்கும் கூட்டமும் இருந்தது. அந்த சீரியலின் டைட்டில் பாடலில் ஆடிய சாந்தி அனைவரது மனதிலும் தங்கிவிட்டார். இவர் அதே மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கிய குலதெய்வம் நாடகத்திலும் நடித்திருந்தார். இந்த சாந்தி…அதாவது அம்மி..அம்மி..அம்மி மிதிச்சு என மொத்த தமிழகத்தையும் ஆடவைத்த சாந்தி நிஜமாகவே டான்ஸர். சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருத்திகாவின் கல்யாணம் நடந்தது.

அப்போது இவர் குடும்பத்தோடு வர அந்த புகைப்படம் இப்போது லீக் ஆகியிருக்கிறது. 13 வயதிலேயே குரூப் டேன்சராக சேர்ந்த சாந்தி ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். படிப்படியாக அசிஸ்டண்ட் டான்ஸ் மாஸ்டராகி, முன்னேறி டான்ஸ் மாஸ்டர் ஆகியிருக்கிறார்.