முடிவுக்கு வரும் குருவின் வக்ர சஞ்சாரம்..! சிம்மத்தில் இருந்து சனியை குறி வைக்கும் சூரியன்..! யார் யாருக்கு திடீர் ராஜயோகம் தெரியுமா..?

ஆவணி மாதத்தில் சூரியன், செவ்வாய், குரு, சனி, புதன் ஆகிய ஆட்சி பெற்ற கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களில் யாருக்கு ராஜயோகமும், திடீர் அதிர்ஷ்டமும் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். கூடவே புதன் இணைவும் அற்புதமாக அமையப்போகிறது.

மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். புதன் பகவான் மாத பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று அமர்வதும் சிறப்பு.

மாத இறுதியில் குருபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய் மாத இறுதியில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.

இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான நான்கு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்: உங்க ராசிநாதன் சூரியன் இந்த மாதத்தில் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஒளிமயமான எதிர்காலம் உங்க கண் முன்னாடி தெரியும். அன்பானவர்கள் அசராதவர்கள் யாருக்கும் அடிபணியாதவர்கள் நீங்கள்.

ஆவணி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ராசியில் ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று கூடவே புதன் அமர்ந்திருப்பது சிறப்பு. கையை விட்டுப்போன வேலை கிடைக்கும், புதிய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.

புதிய தொழில் தொடங்கலாம். பிள்ளைகளுக்கு இருந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். சிலருக்கு கண்ணில் பிரச்சினை வரலாம் ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்குங்கள். காய்ச்சல் தலைவலி பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல மாதம், தொழில் செய்பவர்களுக்கு மேன்மையும் லாபமும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மனதிலும் உடலிலும் தைரியம் அதிகரிக்கும்.

புதன் மாத பிற்பகுதியில் ஆட்சி உச்சம் பெற்று அமர்வது சிறப்பு. சிம்ம ராசியில் இருக்கும் சூரியன் பார்வை சனியின் வீடான கும்பம் ராசியின் மீது விழுகிறது. சுக்கிரன் 12ஆம் வீட்டில் அமர்ந்து சனியை பார்வையிடுவதால் உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும்.

புத்திரபாக்கியம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்வீர்கள். உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது சந்தோஷமான மாதம்.

சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் கவனமாக இருங்க. வெகுளித்தனமாக யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விட வேண்டாம். குல தெய்வ வழிபாடு செய்வது குடும்பத்தில் சுப நிகழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

கன்னி: உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சூரியன் உங்க ராசிநாதனுடன் அமர்ந்திருக்கிறார். வேலையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

12க்கு உடையவன் 12ல் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம் ஏற்படும். மாத பிற்பகுதியில் உங்க ராசிநாதன் உங்க ராசியில் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. எட்டுக்கு உடைய செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் நெருப்பு, வம்பு வழக்கு விசயங்களில் கவனமாக இருங்க.

இந்த மாதம் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம. சகோதரன், சகோதரிக்கு இடையே பிரச்சினைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை இல்லாவிட்டால் பஞ்சாயத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

என்ன செய்தாலும் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்க முடியலையே என்ற எண்ணம் உங்களை பலவீனப்படுத்தும். உடல் பலவீனமாக இருப்பது போல தோன்றும். முருகன் வழிபாடு நல்லது. அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபடுங்கள். மனக்குழப்பம் நீங்கும். பிரச்சினைகள் தீரக்கூடிய காலம் வந்து விட்டது.

துலாம்: உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்திருப்பது சிறப்பு. மூன்றில் குரு கேது, நான்கில் சனி சஞ்சாரம் உள்ளது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். திடீர் பணவரவு வரும். கால்வலி பிரச்சினைகளை கவனமாக இருங்க.

களத்திர ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவது சிறப்பு. ராசி நாதன் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டிற்கு வருவது சிறப்பு. புதிய வேலை கிடைக்கும் வண்டி வாகன யோகம் வரும் புது வீடு கட்டும் யோகம் வரும். மாத பிற்பகுதியில் 12ஆம் வீட்டு அதிபதி புதன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு. பணவரவு பல வகையில் இருந்து வரும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தடையில்லாமல் நடைபெறும்.

விபரீத ராஜயோக காலமாகும். நினைத்தது நல்ல முறையில் நிறைவேறும். திருமண தடை நீங்கி நன்மைகள் நடைபெறும்.

சுப செய்திகள் தேடி வரும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வருமானம் ஏதாவது ஒரு வகையில் வரும் பயன்படுத்திக்கங்க. பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி தரும் மாதமாக அமையப்போகிறது. பெற்றோர்களால் நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். மொத்தத்தில் ஆவணி மாதம் தொட்டது துலங்கக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.

விருச்சிகம்: செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இனி உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். எதிரிகள் தொல்லை நீங்கும். பலவீனம் குறைந்து பலம் அதிகரிக்கும். குல தெய்வ அருளினால் நன்மைகள் நடைபெறும். திருமணத்தடையில் இருந்த சிக்கல்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கும். உறவினர்களால் மனம் உற்சாகமடையும். மாத முற்பகுதியில் எச்சரிக்கை தேவை.

எட்டில் சுக்கிரன் ராகு சில சங்கடங்களை கொடுப்பார். எதையும் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடமாற்றம் அடைவதால் மன நிம்மதி ஏற்படும். திடீர் பணவரவு வரும். உங்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பழகும் போது எச்சரிக்கையும் கவனமாகவும் இருங்க. மாத பிற்பகுதியில் திருமணம் சுப காரிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வியாபாரம் லாபமாக நடக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். விருச்சிகம் ராசிக்காரர்கள் தினசரியும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. மாலை நேரத்தில் அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபடுங்கள். குல தெய்வ அருளினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள். உயர்பதவி யோகம் வரும் உங்களின் தற்போதய வேலையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும்.