நகைச்சுவை நடிகை வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு! யார் மாப்பிள்ளை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்..

சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை தான். ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்கள் நகைச்சுவை கலைஞர்கள். காமெடி நடிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான். அவருக்கு அடித்து கோவை சரளா அவர்கள் பேசப்பட்டார். இப்போது காமெடி நடிகைகள் என கூறும் அளவிற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இணைவார் வித்யூலேகா ராமன்.

பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் தான் நகைச்சுவை நடிகை வித்யூலேகா. நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும், வித்யூலேகா ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை படிப்படியாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

தற்போது லாக் டவுன் நேரத்தில் வித்யூலேகாவிற்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த மாதம் 26-ந் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தங்களது திருமணம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம் என நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.