முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ரியோ ராஜ்! குவியும் லைக்குகள்..

சின்னத்திரையில் தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார் நடிகர் ரியோ ராஜ். விஜய் மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கினார். அதன் பின்னர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தார். அதனை தொடர்ந்து கல்லூரி காலம், சுட சுட சென்னை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சியில் பணிபுரியும் போதே ஸ்ருதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பின் சரவணன்-மீனாட்சி என்ற மெகா ஹிட் சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ரியோ ராஜ். இப்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் ரியோ.

ரியோ தனது நீண்டநாள் காதலியான ஸ்ருதியை திருமணமும் செய்து கொண்டார். ரியோ ராஜிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுநாள் வரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத அவர் தற்போது தனது மனைவி, குழந்தைகள் என சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..