நடிகை லாஸ்லியாவின் நியூ லுக் பார்த்து அசந்து போன ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நடிகை லாஸ்லியா. தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடித்து வரும் பிரிஎண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஈழத்து பெண் லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் அறைகுறை ஆடையுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் சுற்று கொண்டிருந்தது. கலாச்சார ஆடையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது அரைகுறை ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.