பிரபல பட நடிகை தமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்க போகிறாரா? குஷியில் ரசிகர்கள்!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில், அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக வெளியான புரமோ வீடியோ பலரையும் கவர்ந்தது. லாக் டவுன் பரிதாபங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது. இந்த சீசனும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் தற்போது பிக்பாஸ் 4வது சீசனும் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்கள் இவர், இவர் பங்குபெறுகிறார்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம் பெறுகிறது.

 

அப்படி இன்று ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டுள்ளது. அவர் யார் என்றால் நடிகை லட்சுமி மேனன் தான். உடல் எடை குறைத்து சமீபத்தில் அதிக போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் பிக்பாஸ் 4ல் பங்குபெறுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.