பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் இறந்துவிட்டதாக வெளியான பதிவு! பலரையும் அதிர்ச்சியாக்கிய ட்வீட்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீன்களை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்நிகழ்ச்சியில் மூன்றாம் சீனில் மீரா மிதுன் வைத்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது. சமீபத்தில் மாடல் அழகியான மீரா மிதுன் விஜய், சூர்ய மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மீரா மிதுன் சமீபத்தில், செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பிருந்தே சில சர்ச்சைகளில் அப்போதிருந்து இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருபவர் நடிகை மீரா மிதுன். அவர் வெளியிட்ட வீடியோக்களும் புகைப்படங்களும், விமர்சிக்கப்பட்டன. சமீபத்தில், இவர் ட்விட்டர் பக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனை, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியே நடத்தமுடியாதபடி செய்து விடுவதாக மிரட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், போலிஸ் விசாரணை நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீரா மிதுன் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இது போல செய்கிறாரா அல்லது அவரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என சந்தேகம் எழ ரசிகர்கள் வழக்கம் போல விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.