இவர்கள் தான் இந்த பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களா..! நட்சத்திரங்களின் புதிய லிஸ்ட் இதோ..

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில், அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக வெளியான புரமோ வீடியோ பலரையும் கவர்ந்தது. லாக் டவுன் பரிதாபங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். தற்போது வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வரும் அக்டோபர் 4 தேதி அன்று ஒளிபரப்பாகும் என ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு இருப்பது, இதில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள தான்.

இந்நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நட்சத்திரங்களின் லிஸ்ட் தான் இப்போது பார்க்கவுள்ளோம்.. அமிர்தா ஐயர், ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ஷாலு ஷாமு, அனு மோகன், லக்ஷ்மி மேனன், ஆர்ஜெ விக்கி, சஞ்சனா சிங், விஜெ ரக்ஷன், கருண் ராமன், பாலாஜி முருகதாஸ், கேபிஒய் புகழ், கிரண் ரத்தோட், ஆர்ஜெ வினோத்.