பிக் பாஸ் ஆரவின் திருமணம் குறித்து பதிலடி கொடுத்த ஓவியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். அதிலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் ஓவியா ஆரவ்வை காதலித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர். எனினும், அது நட்பாக தொடர்ந்த நிலையில் ஆரவ்க்கு திடீர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கௌதம் மேனன் படத்தில் நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் ஓவியா மட்டும் வரவில்லை. இதையடுத்து, ஓவியா ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் சுஜா வருணியின் புகைப்படத்திற்கு கேள்வி கேட்க, அதற்கு சுஜா வருணியும், அவர் பிஸியாக வீட்டிலேயே இருந்திருப்பார் என பதிலளித்திருந்தார்.

இதனால், தன்னுடைய காதலன் திருமணம் குறித்து நிச்சயம் ஓவியா எதையாவது பதிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக விமர்சிப்பது போல், இந்த உலகம் மிகவும் ஆபத்தானது. அது தீமை செய்பவர்கள் அல்ல. ஒன்றும் செய்யாதவர்களால் தான் என கூறியுள்ளார். இவருடைய பதிவைப் பார்த்த ஓவியா ஆர்மி என்ன தலைவி ஆரவ் திருமணத்தால் மனமுடைந்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.