அசின் தம்பியாக போக்கிரி படத்தில் நடித்தவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவ இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை அசின் நடித்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட படம் போக்கிரி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நெப்போலியன், நாசர், பிரகாஷ் ராஜ், ஸ்ரீமான், வைபுரி மற்றும் நடிகை அசினின் தம்பியாக குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் பரத் என பலரும் நடித்திருந்தனர். மாஸ்டர் பரத் தமிழில் பஞ்சதந்திரம், போக்கிரி, உத்தமபுத்திரன், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகை விட தெலுங்கு 20 பாடகங்ளுக்கும் மேல் நடித்துள்ளார்.

போக்கிரி படத்தில் விஜய்யுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் மக்களிடம் பரத்தை கொண்டுபோய் சேர்த்தது. இந்நிலையில் மாஸ்டர் பரத்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்து போக்கிரி படத்தில் நடித்திருந்த சிறு பையன்னா இது, என ரசிகர்கள் கேட்டுக்கும் அளவிற்கு, ஆள் அடையாளம் தெரியாமல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் மாஸ்டர் பரத்.