அண்ணாத்த படத்தின் வில்லன் இவர்தானாம்..! வெளியான படத்தின் நியூ அப்டேட்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து இயக்க வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என திரையுலக பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்குவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாராவின் காட்சிகள் தான் இதில் முதலில் எடுக்கப்படுமாம். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இப்படத்தின் வில்லனுக்கும் சம்மந்தப்பட்ட காட்சிகள் உருவாகுமாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லாக நடிக்கவிருப்பவர் தெலுங்கு நடிகர் கோபிசந்த் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அவர் இப்படத்தில் கமிட்டாகவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தில் தளபதி விஜய்யுக்கு வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தான் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லாக கமிட் செய்யப்பட்டுள்ளார் என தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இவர் தமிழில் ஆரண்யா காண்டம், கோச்சடையான், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.