பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு!! வெளியான தகவல்

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நாடகத்தில் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர் என அதில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மீனா கதாபாத்திரத்தில் வரும் ஹேமா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் சீமந்தம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே நடந்துள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளைகாப்பு எபிசோடுகள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று அவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரத்திற்கு தான் குழந்தை பிறந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.