தளபதி விஜய் சிஎஸ்கே வெற்றியை விசில் அடித்து கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ இதோ..

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். சினிமாவில் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி எப்போதோ நடந்திருக்க வேண்டியது, ஆனால் கொரோனா பிரச்சனை எல்லாவற்றையும் முடக்கிவிட்டது. நிறைய டெஸ்ட் பிறகு இந்த ஐபிஎல் போட்டி துபாயில் மிகவும் பாதுகாப்பாக நடந்து வருகிறது. சின்ன குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை கிரிக்கெட் விளையாட்டை விரும்பாதவர்கள் இல்லை. கிரிக்கெட் விளையாட்டிற்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் தொடக்க போட்டியிலேயே சிஎஸ்கே அணி வெற்றியை கைப்பற்றி விட்டது. எனவே ரசிகர்கள் அதனை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் விஜய் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை விசில் அடித்து துள்ளி குதித்து கொண்டாடிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தளபதி ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.