மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய நடிகர் ஜீவா! எவ்வளவு அழகு.. குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் ஜீவா. ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை பின்னர் ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்நடிகர் ஜீவா. தற்போது ஜீவாவின் களத்தில் சந்திப்போம், மேதாவி போன்ற படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. தனது கலகலப்பான பேச்சால் தனக்கென்று ஓர் ரசிகர் குடத்தை பெற்றவர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ”எனது சைல்டுஹூட் ஸ்விட்ஹார்ட்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், மேடு பள்ளத்திலும், சண்டையிலும் சந்தோஷத்திலும், வீடியோகேம்ஸ் முதல் பாத்திரம் கழுவுவது வரையிலும் என பிறந்தநாள் வாழ்த்தை க்யூட்டாக தெரிவித்துள்ளார் ஜீவா. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் இன்றி, நடிகர் ஜீவாவின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.