வனிதா மற்றும் ஆகாஷ் மகனான ஸ்ரீஹரி சினிமாவில் நடித்துள்ளாரா? இணையத்தில் வெளியான புகைப்படம்!!

கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணமா செய்து கொண்டார். இது குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். வனிதா ஆகாஷ் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு பிறகு நடந்த அனைத்தும் ரசிகர்கள் அறிந்ததே. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம்.

வனிதா மற்றும் ஆகேஷை போல இவர்களின் மகனான ஸ்ரீஹரியும் சினிமாவில் நடித்துள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் ஸ்ரீஹரி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதை பற்றி வனிதா கூட எந்த பேட்டியிலும் சொன்னது இல்லை. தற்போது இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.