விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான அரண்மனை கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா.. வருத்தத்தில் ரசிகர்கள்

சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ், அரண்மனை கிளி என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

விஜய் தொலைக்காட்சியின் அரண்மனை கிளி சீரியல் மூலம் பிரபலமானவர் மோனிஷா. மலையாள நடிகையான இவர் அரண்மனை கிளி என்ற சீரியலில் முன்னணி நாயகியாக நடித்தார். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் அரண்மனை கிளி. இடையில் கொரோனா பதற்றத்தால் அவர் கேரளாவிலேயே செட்டில் ஆக மீண்டும் சீரியலில் நடிக்க தமிழ்நாடு வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

சீரியலும் அவருக்கு ஏற்றார் போல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் தான் ஜானு என்கிற மோனிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவருக்கு ஒரு குட்டி மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.